மாநில அளவிலான தமிழ்ப் போட்டிகள்
பேச்சுப்போட்டி
கட்டுரைப்போட்டி
கவிதைப்போட்டி
ஓவியப்போட்டி
பிரிவுகள்
பிரிவு 1: 3,4,5,6ஆம் வகுப்புகள்
பிரிவு 2: 7,8,9ஆம் வகுப்புகள்
முன்பதிவு இறுதி நாள் : மார்ச் 1
போட்டிகளுக்கான விளக்கங்கள் மற்றும் விதிமுறைகள்
ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி போட்டிகள் நடத்தப்படும்.3 -ம் வகுப்பு பயில்பவர் முதல் கலந்து கொள்ளலாம்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு பரிசுகளும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், இலவச தமிழ் பயிற்சி முகாம் வாய்ப்பு வழங்கப்படும்.
பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் விரும்பும் பட்சத்தில், வெற்றிபெறும் மாணவ – மாணவியருக்கு அடுத்த கட்ட வாய்ப்புகளையும் தேடித்தரத் தயாராக இருக்கிறோம். உள்ளூர்த் தொலைக்காட்சிகள் முதல் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் வரை அவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிக்காட்டவும், பிரபல பத்திரிகைகளில் தங்கள் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளவும், பங்கேற்கவும் ஆவன செய்யப்படும்.
தலைப்புகள்
தமிழ் நேற்று ! இன்று ! நாளை ?
தமிழ் அவமானம் அல்ல! “அடையாளம்”
தமிழ் மீளும்!தமிழ் ஆளும்!
போட்டிகள்
1.பேச்சுப்போட்டி
போட்டியாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினை கருப்பொருளாகக் கொண்டு பேச வேண்டும்.
அதிகபட்சமாக 3 நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
3 நிமிடங்களுக்கு மேல் பேசுவது விதிமுறைகளை மீறுவதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அது தேர்ச்சியைப் பாதிக்கும்.
மாணவர்களின் பேச்சுக்கள் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்வு செய்யும் 15 மாணவ – மாணவியர் மட்டும் இறுதி கட்டப் போட்டிகளுக்காகத் தேர்வு பெறுவர்.
தேர்ச்சிபெறுவோர் அரங்கத்தில் நடைபெறும் இறுதிக் கட்டப் போட்டிகளில் பங்குபெற்று, மேடையேறிப் பேச அனுமதிக்கப்படுவர்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
2.கவிதைப்போட்டி
3.கட்டுரைபோட்டி
போட்டியாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினை கருப்பொருளாகக் கவிதை/கட்டுரை படைக்க வேண்டும்.
கவிதை/கட்டுரை தங்களுடைய சொந்த கவிதையாயிருத்தல் வேண்டும்.
சமர்பிக்கும் கவிதை இதற்கு முன்பு எந்த ஒரு நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ அல்லது இணையதளத்திலோ வெளியிட்டிருத்தல் கூடாது.
படைப்புகள் தூய தமிழில் இருந்தால் சிறப்பு.
இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பின்பற்றுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
A4 தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.ஓவியப்போட்டி
போட்டியாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினை கருப்பொருளாகக் ஓவியம் வரைய வேண்டும்.
ஓவியம் தங்களுடைய சொந்த படைப்பாயிருத்தல் வேண்டும்.
சமர்பிக்கும் ஓவியம் இதற்கு முன்பு எந்த ஒரு நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ அல்லது இணையதளத்திலோ வெளியிட்டிருத்தல் கூடாது.
A4சார்ட்டில் வரையப்பட வேண்டும்.
A4 சார்ட் போட்டியின் போது வழங்கப்படும்.
வரைபொருட்கள்,வண்ணங்கள் போன்றவற்றை மாணவர்களே கொண்டு வருதல் வேண்டும்.
அனைத்து போட்டிகளுக்குமான பொதுவான விதிமுறைகள்
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் உடனடியாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
044-48555132, 7358579315,8072266107
ஒரு போட்டிக்கான பதிவுக் கட்டணம் ரூ.200. போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி அனுப்பி பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி, பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் பெயர் மாற்றத்தக்கதல்ல.
பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக ஒரு பொறுப்பாசிரியர் மாணவ மாணவிகளின் பெயர்களை மொத்தமாக ஒரே விண்ணப்ப படிவத்தில் நிரப்பி அனுப்பலாம்.
பெற்றோர் தம் சொந்த விருப்பத்தின் பேரிலும் மாணவர்களை அழைத்து வரலாம்.
ஒரே மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தங்கள் பள்ளி அடையாள அட்டையைக் கட்டாயம் எடுத்துக் கொண்டுவர வேண்டும்.
போட்டிகள் நடத்தப்படும் நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அரங்குக்கு வந்து, வருகையினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையானவற்றை இணைத்து மின்னஞ்சல் அல்லது வாட்ஸப்பிலோ அனுப்ப வேண்டும்.
முதல் கட்டத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் நடுவர்கள் தேர்வு செய்யும் மாணவ – மாணவியர் மட்டும் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.
பிரம்மாண்டமான இறுதிக்கட்டப் போட்டிகள் திரைத்துறை/இலக்கிய/கலைத்துறை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
தொடர்புக்கு :
பாரதி அகாடமி,
எண்: 162/70, வடக்கு ரெட்ஹில்ஸ் ரோடு,
வில்லிவாக்கம்,
சென்னை-49.
போன்: 044-48555132,7358579315,8072266107.
mail : bharathyacademychennai@gmail.com
fb page : https://www.facebook.com/bharathyacademyvillivakkam/